
நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்களை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பதவி விலகல் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முன்னோடியான கலந்துரையாடல் மேற்கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தி முன்னேறுவதே நாட்டை முன்னோக்கி செல்ல ஒரே வழி எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்இ அனைவரையும் ஒன்றிணைத்து இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் பணியாற்றுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பதவியில் இருப்பவர்களை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர்இ பதவி விலகல் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது எனவும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் அதே நேரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்.




