இலங்கையின் நடிகை சுமனா அமரசிங்க காலமானார்

இலங்கையின் பழம்பெரும் நடிகை சுமனா அமரசிங்க தமது 74ஆவது வயதில் காலமானார். அவரது குடும்பத்தார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுமனா அமரசிங்க இலங்கை சினிமா மற்றும் நாடகத்துறையில் ஒரு பிரபலமான நட்சத்திரமாகவம், தயாரிப்பாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரிய பெண்மணியாவார்.

பத்திரிகை நிறுவனம் ஒன்றினால் நடாத்தப்பட்ட ‘அழகான முகப் போட்டியில்’ முதலாம் இடத்தைப் பெற்ற தெனிபிட்டிய விதானகே சுமண அமரசிங்க, ரூபி டி மெல் இயக்கிய ‘பிபென குமுது’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *