ரஷ்ய விமானம் தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விளக்கம்

கொழும்பு, ஜுன் 05

ரஷ்ய ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை இல்லை என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பினால் பயணிகளுக்கும் ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்திற்கும் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டு மீண்டும் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு குறித்த ரஷ்ய நிறுவனம் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *