தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அஸ்ட்ரா செனகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக் கொள்ளாதவர்கள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ரா கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸை செலுத்துவதற்கு 6 மாதங்கள் கால அவகாசம் இருப்பதாக உலக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் ஜனவரி 15 ஆம் திகதிக்கு பின்னரே அஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனால் அவர்களுடைய 6 மாத கால எல்லை இதுவரையில் நிறைவு பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *