தியாகி பொன். சிவாகுமாரனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமெனின் தமிழர்கள் பாதுகாப்பாக, சகல உரிமைகளுடன் வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் மற்றும் மகளிர் அமைப்பின் தலைவி வாசுகி ஆகியோர் தியாகி சிவாகுமாரனின் பற்றி சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.
எங்கள் தேசத்திற்காக சிவகுமான் 1974 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸாருடைய அடாவடி காரணமாக தனது உயிரைத் நீர்த்துக்கொண்டவர்.
தமிழ் மக்கள் மீது ஸ்ரீமாவோ அரசாங்கம் பல்வேறு அடுக்கு முறைகளை மேற்கொண்டிருந்தது.
கல்வி தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களுடைய உயர் கல்வி வாய்ப்பை தட்டி பறித்தது, சிங்கள, பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கள் போன்றவற்றால் தமிழ் மக்கள் கொதித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில், தமிழாராய்ச்சி மாநாடு யாழில் நடந்த வேளையில் இதற்கு தமிழர்களையே எதிராக பயன்படுத்தினர்.
இந்த சூழ்நிலையில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்கு சிவகுமான் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
இந்த சமயத்தில் சிவகுமார் தனது உயிரை தியாகம் செய்ய வேண்டிய சூழல் எழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதன் மூலம் தமிழர்களுக்கு, எங்களின் விடுதலைக்காக, தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்ற செய்தியை விட்டுச்சென்றார்.
இவரின் தியாகத்தின் பிற்பாடு தேசத்தின் விடுதலைக்காக அளப்பெரும் தியாகங்கள் நடைபெற்றிருக்கின்றன.
இவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுமெனின் தமிழர்கள் பாதுகாப்பாக, சகல உரிமைகளுடன் வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும்.
எனவே இந்த இலக்கை அடைவது தான் நாங்கள் செலுத்த வேண்டிய ஆத்ம சாந்தியாகும், ஆகவே அமைதியான முறையில் எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தினை அடைவதற்காக பயணிப்போம். – என்றார்.
மகளிர் அமைப்பின் தலைவி வாசுகி தெரிவிக்கையில்,

அன்றைய காலகட்டத்தில் தமிழ் இனம், மக்களுக்கான ஒரு எண்ணத்தை, ஒரு தனிமனிதனாக இருந்து கூட பலர் சேர்ந்து ஒத்துழைக்க முடியாத நேரத்தில் தமிழ் மக்களுக்கான தமிழ் தேசத்திற்கான இறைமையை தேடி ஓடியவர்களில் பொன். சிவகுமார் வழிகாட்டியாக இருக்கிறார். இவரின் காலத்தில் செழிமையாக இருந்த காலங்களை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
பொட்டாசியம் சைனட் என்றது குப்பியாக வரமுன்னரே தன் நகத்திற்குள் தற்பாதுகாப்பிற்காக வைத்து தமிழ் இனத்திற்காக பாடுபட்ட ஓர் இளைஞன். தமிழ் இளைஞர்களுக்கு வீரத்தை ஊட்டிய மகான் என்று கூறவேண்டும்.
இற்றைவரை வழிகாட்டி ஆகவும் தமிழ் தேசத்திற்கு ஒரு தியாகியாகவும் இருந்த அவரின் வழியில் இந்த தேசத்தை பெற பயணிப்போம். -என்றார்.
பிறசெய்திகள்




