கொழும்பு, ஜுன் 05
இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் சினிமாத்துறை அபிவிருத்தி தொடர்பில் பொலிவுட் நடிகர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ சந்தித்துள்ளார்.
பொலிவுட் நடிகை சித்ரங்டா சிங் மற்றும் டினோ மொரியா ஆகியோர் இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, இந்திய சினிமா காட்சிகளுக்காக இலங்கையில் படப்பிடிப்புகளை மேற்கொள்வது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.






