
நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய எரோஃப்ளோட் விமானத்தில் நாட்டை வந்தடைந்த சகல பயணிகளும் தற்சமயம் வெளியேறியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தில் 191 பேர் நாட்டை வந்தடைந்த நிலையில், அவர்கள் வேறு விமானங்களின் ஊடாக ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் உப தலைவர் ரஜிவ் சூரியாராச்சி தெரிவித்தார்.
குத்தகை பிரச்சினை காரணமாக ரஷ்யாவின் ‘எரோஃப்ளோட்’ விமானம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையினை நீக்குமாறு கோரி ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்தினால் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு எதிர்வரும் 8ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிறசெய்திகள்




