
வெளிநாட்டு நாணயங்களை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப் பயணி இந்தியாவின் சென்னைக்கு விமானத்தில் ஏறத் தயாராகிக்கொண்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய நடத்தை காரணமாக கைது செய்யப்பட்டார்.
45 வயதான இந்திய வர்த்தகர் இன்று (05) காலை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகள் முனையத்தில் உள்ள கழிவறைக்கு அவர் குறுகிய காலத்தில் பலமுறை சென்றதால், விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து, வியாபார நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்ததாக கூறப்படும் பயணியை சந்தேகத்தின் பேரில் அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவரது சாமான்களை சோதனையிட்டதில் 117,000 கனேடிய டாலர்கள் மற்றும் 19,000 யூரோக்கள் ரொக்கமாக இருந்தது.
பயணி மற்றும் அறிவிக்கப்படாத வெளிநாட்டு நாணயங்கள் மேலதிக விசாரணைகளுக்காக BIA இல் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிறசெய்திகள்
இளைஞர்களின் வாழ்வை மாற்றிய சிறுவன்!




