தமிழ்நாட்டு முதலமைச்சர் ஈழ அகதிகளை விடுவிக்க வேண்டும்; கஜேந்திரன் எம்.பி கோரிக்கை!

தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்களுடைய விடுதலையை வலியுறுத்தி 17 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அவர்களது உடல் நிலைகள் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. எங்களுடைய உறவுகளாக இருக்கும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது எங்களுக்கு வேதனையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

இந்த விடயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தமிழக சிறப்பு முகாம்களில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களது கோரிக்கைகளை ஏற்று அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பு யுத்தம் மற்றும் ஒடுக்குமுறை காரணமாகவே இங்கு வாழமுடியாது இந்தியாவில் தஞ்சமடைகின்றனர். எனவே வாழமுடியாத நிலையில் உயிராபத்து கருதி வெளியேறியவரகள் இந்தியாவுக்கு வந்த போது கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டது ஒரு மிகுந்த வேதனைக்குரிய விடயம்.

எனவே முகாம்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்று அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

பிறசெய்திகள்

இளைஞர்களின் வாழ்வை மாற்றிய சிறுவன்!

பங்களாதேஷில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு!

எரிவாயு விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *