விவசாய நிலத்தில் கொரோனா ஜனாஸா அடக்கம்!- முஸம்மில் முகைதீன் குற்றச்சாட்டு

விவசாய நிலத்தை கொரோனா ஜனாஸா அடக்க ஒதுக்கியது அரசியல் தலைவர்களின் ஒரு சூழ்ச்சியே என தேசிய விடுதலை மக்கள் முண்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.

கொரோனாவால் உயிரிழக்கும் ஜனாசாக்களை அடக்குவதற்காக கிண்ணியா வட்டமடுவில் காணி ஒதுக்கப்பட்ட நிலையில், அப் பகுதிக்கு நேற்று விஜயம் செய்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் காணியை அடக்கஸ்தலத்துக்கு பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது பொருத்தமானதும் இடமுமல்ல.

சுமார் முப்பது வருட காலமாக இங்கு விவசாய செய்கையில் ஈடுபடுகிறார்கள். அருகில் உள்ள குளத்தை நம்பியே விவசாய செய்கையில் செய்யப்பட்டு வருகின்றது. இதில் பிரதேச செயலாளர் இணைந்து செயற்படுவது அரசியல் சூழ்ச்சியேயாகும்.

அடக்கஸ்தளங்களுக்கு இடம் தேவை தான். ஆனாலும், மக்கள் காணிகளை கையகப்படுத்தக்கூடாது. தரிசு நிலங்கள் இருக்கின்றபோதிலும், ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து காணியை கையகப்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply