பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து GMOA எச்சரிக்கை!

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக மீள் பரிசீலிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், டெல்டா திரிபானது எதிர்வரும் மாதங்களில், நாட்டில் பிரதான வைரஸ் திரிபாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

அத்தோடு, பொது மக்கள் ஒன்றுகூடும் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 50 க்கும் 60 இற்கும் இடையில் மட்டுப்படுத்த வேண்டும் எனவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லலையெனில், பொருத்தமான வகையில் தற்போதைய எண்ணிக்கையைவிட குறைந்த மட்டத்தில் அந்த எண்ணிக்கை இருக்க வேண்டும் அந்த சங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *