
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், அம்பாறையில் இதுவரையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைத்தமை மற்றும் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டது.
குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி கொழும்பில் மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டக்களத்தின் மீது அரச ஆதரவு தரப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டதை அடுத்து நாடு தழுவியதாக அரச தரப்பு பிரமுகர்களது வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிலையங்கள் என்பன தாக்கி எரியூட்டப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




