நீர் கட்டண பட்டியல்களை இலத்திரனியல் முறையில் வழங்க துரித நடவடிக்கை

நீர் கட்டண பட்டியலை மின்னஞ்சல் ஊடக பெற்றுக்கொள்ளும் வகையில் முன்பதிவு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி, நீர் கட்டண பட்டியல் இலக்கம் மற்றும் மின் அஞ்சல் முகவரியினை 0719 3 99 999 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேவையான நீர் கட்டண பட்டியலை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசி மாத்திரமே காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீர் கட்டண பட்டியல்களை இலத்திரனியல் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *