ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் இன்று திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
மேலும் இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
எனினும் சந்திப்பிற்கு முன்னர் தமது கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் தாம் சந்திப்பொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மேலும் ஜனாதிபதியுடன் எவ்வாறான விடயங்களை கலந்துரையாடுவது என்பது தொடர்பில் இந்த சந்திப்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.