அரசியலமைப்பு திருத்தம்: அதிருப்தி தெரிவித்த பொதுஜன பெரமுனவின் எம்பிக்கள்

கொழும்பு, ஜுன் 06

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதற்கு பதிலாக அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (05) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த குழுவினர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, அம்பாறை மக்களின் உரப்பிரச்சினைக்கு அரசியலமைப்புத் திருத்தங்கள் தீர்வாக அமையுமாயின் அவ்வாறானதொரு விடயம் கொண்டுவரப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *