இலங்கைக்காக ஐ.நா. உலக நாடுகளிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளது.

இலங்கைக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உலகின் அனைத்து நாடுகளிடமும் இந்த கோரிக்கையை அதிகாரபூர்வமாக முன்வைக்க உள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கு அவசர உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான வீ.ஷாரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி அமைப்பின் இலங்கைக்கான பிரதி பிரதிநிதி எம்.ஹார்விக் ஆகியோருடன் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் உணவு தட்டுப்பாடு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரசாயன உரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையினால் விவசாயத்துறை பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *