மக்கள் கஷ்டப்படும் போதும் அரசு வரப்பிரசாதங்களை பயன்படுத்துகிறது! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது ஏனைய அதிகாரிகளினதோ சிறப்புரிமையை அரசாங்கம் குறைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வரும் வேளையில் கூட இவற்றை செய்யவில்லை என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சாட்டினார்.

அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனங்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உத்தியோகபூர்வ இல்லங்கள், சம்பளம் அல்லது ஏனைய சலுகைகளை குறைக்கடவில்லை என சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் மீது பொதுமக்கள் அதிருப்தி கொண்டுள்ள நிலையில், தேர்தலின் மூலம் மட்டுமே அதனை சரிசெய்ய முடியும் என சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *