நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று டொலர்கள் சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த பொருளாதார திட்டமும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் அடுத்த ஆறு மாதங்களுக்கான பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
அதில், ஹெட்ஜிங் ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் வளங்கள் சூறையாடபட்டது போலவே அடுத்த ஆறு மாதங்களுக்குள் அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் நமது நாட்டு வளங்கள் விற்கப்படும்.
யுகதனவி மின் நிலைய ஒப்பந்தமும் இத்தகைய வள சூறையாடளின் ஒரு பகுதியே ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.