இலங்கை மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நன்கொடை!

இலங்கை மக்களுக்கு நன்கொடையாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயண கிரிக்கெட் தொடருக்கான டிக்கட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்பார்த்துள்ளதாகவும், டிக்கட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் முழுப் பணத்தையும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்தவுடன் பாகிஸ்தான் விரைவில் நாட்டிற்கு வரும், என்றும் அதன் பின்னர் கொழும்பில் ஆசிய கோப்பை தொடர் இடம்பெறவுள்ளது என்றுமு; குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த போட்டிகளை ஆதரிக்க வேண்டுமென அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *