<!–
புதிய நாடாளுமன்ற குழுக்களை அமைப்பதற்கு உதவுமாறு பிரதமரின் கோரிக்கையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மேற்பார்வைக் குழுக்களை வலுப்படுத்துவதுடன், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கரு ஜயசூரியவுக்கும் இடையில் நேற்று கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றபோதே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


