
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 20 வீதமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றிருந்த சிறுவர்களின் நிறை மற்றும் உயரம் என்பன குறைந்திருந்ததை அடுத்து அவர்களைப் பரிசோதித்த போதே இவ்வாறு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுவர்கள் காபோவைதரேற்றுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் விற்றமின்களை தேவையான அளவுகளில் பெறாததே இதற்குக் காரணம் என்று மருத்துவமனையின் மருத்துவ கலாநிதி தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையே இந்தப் போஷாக்கின்மைக்குக் காரணமாகும். எனவே சிறுவர்களுக்கு அதிகளவு காய்கறிகளை உண்ணக் கொடுத்தால் இந்த நிலைமையைத் தவிர்க்க முடியும் என்றும் மருத்துவர் கலாநிதி தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

