
நமது நிருபர், ஜுன் 06
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வின்போதே இந்தக் கூட்டமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சமாதானம் சகவாழ்வு மற்றும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான பயணம் எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, தெற்கு கிழக்கு, மலையகம் என இலங்கையின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்க உள்ளனர்.

