தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவம்;மேலும் ஒருவர் கைது!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதான கணனி தொழில்நுட்ப வல்லுனர் ஆவார்

திரு தென்னகோன் கடந்த 10ஆம் திகதி கொழும்பு 2 பெரஹெர மாவத்தையில் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டார்.

முன்னதாக, 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

தாக்குதலில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்சலம் டி சில்வாவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *