
நாட்டில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாற்கு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன சிறுமி தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மூங்கிலாறு வடக்கு பகுதியில் 12வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 4ம் திகதி இரவு நித்திரை கொள்ள சென்ற சிறுமி அதிகாலையில் வீட்டில் காணவில்லை.
இந்நிலையில் வீட்டில் இருந்த பணம்இ தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ள நிலையில் தன்னை தேடவேண்டாம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பாடசாலை மாணவி சமூகவலைத்தளங்களில் அண்மையில் தொடர்பில் இருந்ததாகவும் ஹட்டன் பகுதியினை சேர்ந்த நண்பன் ஒருவரை காதலித்துள்ளதாகவும் டிக்டக் தகவலின் படி மாணவி காதலனை தேடி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை மாணவியின் தொடர்பு ஒருதடவை கிடைத்துள்ளதாகவும் மேற்கொண்டு தொடர்பு கிடைக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்

