
சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச்செல்ல முற்பட்ட இந்திய நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1 லட்சத்து 17 ஆயிரம் கனேடிய டொலர்கள் மற்றும் 19 ஆயிரம் யூரோக்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்ததுடன் அவரிடமிருந்த வெளிநாட்டுப் பணம் சுங்கத்திணைக்களத்தால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.




