நாட்டுக்கு மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன

இலங்கைக்கு  மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இந்த வாரத்தில் மாத்திரம் 8 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவிலிருந்து இதுவரையில் 2.4 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply