யாழில் வீதியால் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு

யாழ். சுன்னாகம் – குண்டுக்குளம் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குண்டுக்குளம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட வன்முறைக் கும்பலொன்று வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சம்பவத்தில் சுன்னாகம் – கந்தரோடை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *