
கொழும்பு,ஜுன் 06
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
குறித்த விசாரணைகளுக்கமைய, சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட தங்காலையைச் சேர்ந்த பகுதியைச் சேர்ந்த, 53 வயதான நபரொருவர், இன்று(6) காலை கொழும்பில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை புதன்கிழமை (8) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபரை குறித்த தினத்தில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் அதன்போது, உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




