இறக்குவானை-தெமுவாத கடை பகுதியில் உள்ள போர் வீரர்களின் நினைவுச்சின்னமும் அருகிலுள்ள புத்தர் சிலையும் இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இரக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் இந்த இடத்தில் இன்னுமொரு மத கடவுளின் சிலையை வைப்பதற்கு ஒரு குழு முயற்சித்தது. எனினும் மற்றொரு குழுவின் எதிர்ப்பு காரணமாக அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த சம்பவமே போர் வீரர்களின் நினைவுச்சின்னம் மற்றும் புத்தர் சிலை ஆகியவற்றை அழிக்க காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.