அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் இடம்பெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 58வது நாளை எட்டியுள்ளது.
குறித்த தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றையதினம் திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத் தம்பதியர் திருமண நிகழ்வை தொடர்ந்து கோட்டா கோ கமவிற்கு நேரடியாக விஜயம் செய்து தமது ஆதரவை தெரிவித்தனர்.




