தோல்வியடைந்த ஜனாதிபதியாக தம்மால் வெளியேற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தம்மை பதவி விலகுமாறுக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், தமது பதவிக் காலத்தில் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களை நிறைவு செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள நிதி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரசாயன உரம் மீதான தடை மற்றும் சேதனப் பசளை ஊடான விவசாயம் குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




