
கொழும்பு,ஜுன் 06
மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்தவின் இணைப்பு செயலாளர் ஒருவரே இவ்வாறு கொழும்பில் வைத்து சிஐடி.யினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய பல சிஐடி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அவரைக் கைது செய்ய பொலிஸார் தொடர்ச்சியாக தேடி வருவதாக அவர் கூறினார்.




