
இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து பாதிப்பால் இன்று பல வகுப்புகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
மாணவர்கள் பாடசாலை போக்குவரத்து சேவைகளிலே அதிகமாக வருகின்றனர். ஆனால் இன்று அவ் வண்டிகளும் டீசல், பெற்றோல் வரிசையில் நிற்கின்றனர். இச் செயற்பாட்டால் பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டுமே.
இது குறித்து தொழிற்சங்கத்தினரிற்கு கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுகிறது.
மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது. அதேபோல பாடசாலை போக்குவரத்து சேவை இல்லாத சந்தர்ப்பத்தில் மாணவர்கள் பேரூந்தில் இருகி நசிந்து வருகின்றனர்.
சில வகுப்புகளில் 63 மாணவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரு வகுப்பில் 36 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அங்கு அதிகப்படியான மாணவர்கள் உள்ளனர், இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துங்கள். அமைச்சர்களின் கோரிக்கைப்படியே இவ்வாறான செயற்பாடுகள் நடக்கின்றன.
அதேபோல ஆசிரியர்களிற்கும் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களிற்கு சலுகைகள் வழங்க வேண்டும். அரசாங்க நிறுவனத்தில் கிழமைகளில் 3 நாள் வேலை மற்றைய நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்களிற்கு அவ்வாறு இல்லை.
முதல் கடவுச்சீட்டு எடுக்ககூடிய வகையில் இருந்தது. ஆனால் இன்று அதும் இல்லை. மற்றும் இன்று நாட்டு மக்கள் வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தி தாருங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




