அரச உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்தவாறு கடமை; புதிய திட்டம் தயாராகிறது!

அரச உத்தியோகத்தர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்வதற்கான திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பில் தற்போது மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச ஊழியர்கள் பணிக்கு செல்வதால் ஏற்படும் அதிக செலவைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.

எது எப்படி இருப்பினும், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *