திலிப் வெதாராய்ச்சியின் மகன், மருமகள் கைது

பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராய்ச்சியின் மகன் மற்றும் அவரது மருமகள் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரவிந்து வெதாராச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பிற்பகுதியில் குளிர்சாதனபெட்டியை ஏற்றி தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முயற்சித்திருந்தனர்.

இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் அவர்களை தடுத்துள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

அதன்படி இன்று வீரகெட்டிய பொலிஸில் சரணடைந்த ரவிந்து வெதஆராச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *