கல்முனையும் இனவாத செயற்பாடுகளும், தமிழருக்கு எதிரான சூழ்ச்சிகளும் தொடர்கிறது – தாமோதரம் பிரதீவன்
இன்று நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது ஆட்சியாளர்கள் வெளியேற வேண்டும் எனும் போராட்டங்கள் இன மத மொழி பேதமின்றி நாடெங்கும் நடக்கிறது ஆனாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி (கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படாமல் இதுவரை காலமும் தடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் ) தற்போது புதிதாக கல்முனை காணி அலுவலகத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேசத்திற்கான காணி அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றது (இது நடந்து பல வாரங்கள் கடந்துள்ளது) இவ்வாறான தொடர்ச்சியான தமிழ் மக்களுக்கு எதிரான குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்ிற்கு எதிரான செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கினறன,
இந்த காணி அதிகாரம் நீக்கப்பட்டது காணி அமைச்சின் ஊடாகவா அல்லது காணி அமைச்சின் செயலாளரூடாகவா அல்லது இது யாரால் அதிகாரம் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகளை நடாத்த வேண்டும் என்றும் இங்கிருந்து பறிக்கப்பட்டிருக்கின்ற காணி அதிகாரம் மீண்டும் எமது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும்,
அண்மையில் கூட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல அரச காணிகள் சில இனவாத சிந்தனை கொண்ட அல்லது தமிழ் முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைத்து அதில் குளிர்காய நினைப்பவர்களினாலும் அவர்களது சகாக்களினாலும் கபளீகரம் செய்யப்பட்டு அது எமது பகுதி சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புகள் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீட்டால் தடுக்கப்பட்டாலும் காணி அதிகாரத்தைப் பறித்துவிட்டு இவ்வாறு காணிகளைக் கபளீகரம் செய்வது தொடர்பில் பாரிய அச்சமும் சந்தேகமும் கவலையும் எமக்கு ஏற்படுவதோடு இவ்வாறான சிலரது செயற்பாடுகள் ஒரு இன முறுகலை ஏற்படுத்தக் கூடும் என்பதாலும் இவைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்டு காணப்படுகின்ற பாண்டிருப்பு கல்முனை சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை எல்லை போன்ற பிரதேசங்களில் காணப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம நிலதாரி பிரிவுகள் கூட இன்று கல்முனை முஸ்லிம் பிரிவோடு இணைக்கப்பட்டிருக்கின்றது (கடந்த வாரம்தான் நான் இது பற்றி அறிந்தேன்) இந்த விடயம் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த இடத்திலே நான் கேட்டுக்கொள்வதோடு,
கல்முனையின் பழம்பெரும் கிராமமான பாண்டிருப்பின் அடயாளப் பெயர்களில் ஒன்றான செட்டியார் வீதி எனும் வீதியின் பெயரை அல்மினன் வீதி என மாற்றியிருக்கிறார்கள் அத்தோடு கடந்த காலங்களிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல வீதிகளின் பெயர்களில் கூட பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது என்பதையும் இந்த விடயங்கள் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு இவ்வாறான செயற்பாடுகளை செய்யும் இனவாதிகளும் வங்குரோத்து அரசியல்வாதிகளும் இவைகளை நிறுத்த வேண்டும் எனவும் இந்த பிராந்தியத்தில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை தடுத்து அல்லது குழப்ப நிலையை உருவாக்கி அதில் குளிர்காய வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
கல்முனை வடக்கு
இன்னும் இருக்கு
அவை இனி தொடராக வெளிரும்..,..

