தமிழ் இளைஞர் சேனையின் தேசத்தின் விழுதுகளுக்கான உதவிக்கரம்.
கல்முனை தமிழ் இளைஞர் சேனையினால் கல்முனை பிரதேசத்தில் உதவி தேவைப்படும் குடும்பங்களை பொருளாதார மற்றும் கல்வி ரீதியிலும் முன்னேற்றும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டின் 3ம் கட்டமாக ;
கல்முனை பாண்டிருப்பு, கல்லாறு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட உதவி தேவைப்படும் 04 தேசத்தின் விழுதுகள் குடும்பங்களை இனங்கண்டு 01 மாதத்துக்கு தேவையான 10,000 ரூபாய் பெறுமதியான 04 உலர் உணவு பொதிகள் முதற்கட்டஉதவியாக வழங்கப்பட்டது.
இவ் உதவியை வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவுக்கு கல்முனை இளைஞர் சேனையினர் நன்றிகளை தெரிவித்தனர்.




