பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் வில்லி வெண்பா – காரணம் இதுதானாம்

விஜய் டிவியில் ஓளிபரப்பாகும் சீரியல்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது என்றால் பாரதிகண்ணம்மா சீரியலை தான் கூற வேண்டும்.

பாரதி கண்ணம்மா சீரியல் சமீப நாட்களில் அதிக விறுவிறுப்புடன், ரசிகர்களிடம் மிக பிரபலமாகியிருக்கிறது.

மேலும் இதில் டாக்டர் வெண்பா என்ற வேடத்தில் நடிக்கும் ஃபரினா ஆசாத், ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும், தான் விரும்பும் பாரதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை செய்து வருகிறார்.

Advertisement

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தைத் தெரிவித்தார்.

மேலும் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவர், தனது கர்ப்ப கால புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தபுகைப்படங்கள் தற்பொழுதுசெம வைரலாகி வருகின்றது.தனது உடல்நிலையைக் கவனித்துக் கொள்வதற்காக, ஃபரீனா சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதற்கு பதிலளித்த ஃபரீனா, “நான் சீரியலை தொடராமல் போனால், வெண்பாவின் கதாபாத்திரம் மாறுமா என்று பலர் என்னிடம் கேட்டார்கள்.

அத்தோடு வெண்பா கதாபாத்திரம் தொடரும், அதனால் ஃபரீனாவும்… கவலைப்பட வேண்டாம், என்னால் முடிந்தவரை சீரியலில் தொடர்ந்து பணியாற்றுவேன். எனது ரசிகர்களை மகிழ்விப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *