
கொழும்பில் காலையிலிருந்து தொடர்ச்சியாக சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக கடுமையாக மழை பெய்து கொண்டே இருக்கிறது.
இதனால், பிரதான வீதிகளிலும் தாழிநில பகுதிகளிலும் காட்டாறு வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதைப்போல, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. மழையும் சோவென்ற சத்தத்துடன் பெய்துகொண்டிருக்கின்றது.
வீதிகள் பல வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் காணப்படுகின்றன. வீதியோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் பல, கவிழ்ந்து விழுந்துகிடக்கின்றன.