யாழில் வன்முறைக்கு தயாரான  குழுவொன்று இராணுவத்தினரை கண்டதும் தப்பியோட்டம்!!

<!–

யாழில் வன்முறைக்கு தயாரான  குழுவொன்று இராணுவத்தினரை கண்டதும் தப்பியோட்டம்!! – Athavan News

வன்முறைக்கு தயாரான  குழுவொன்று, இராணுவத்தினரை கண்டதும் தமது ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, யாழ்ப்பாணம்- புத்தூர், ஆவரங்கால் வடக்கு பகுதியில்  இடப்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  மோதல் சம்பவம் ஒன்றில் ஈடுபடுவதற்கு  குழுவொன்று தயாராக இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் சென்றுள்ளனர்.

இதன்போது, இராணுவத்தினரை கண்ட குழு,  தம்மிடம் இருந்த ஆயுதங்களை வீசி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரால், அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து,  சம்பவ இடத்திற்கு வருகைதந்த அவர்கள், வீசப்பட்ட ஆயுதங்களை மீட்டனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply