அடுத்த வாரத்திற்குள் பால்மா தட்டுப்பாடு தீர்க்கப்படுமா?

ஒரு கிலோ பால்மாவின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில், சந்தை விலை ரூ 1,145 ஆக மேலும் உயரும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வாரத்திற்குள் பால் மா தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் துறைமுகத்தில் சிக்கியிருக்கும் பால்மா தொகையினை வெளியிடுவதற்கு இன்னும் டொலர் பற்றாக்குறை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply