
ஹப்புத்தளை ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பத்துடன் தொடர்புடைய ஒருவர் கைதானதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைதானவர் ஹப்புத்துளை – சர்வட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த சிலர் அங்கிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல்களில் இருந்த பணம் என்பனவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காணொளி உதவியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்