
இராமநாதபுரம், ஜுன் 07
தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதே பா.ஜ.கட்சியின் நோக்கம் என அக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.
இராமநாதபுரத்திற்கு திங்கட்கிழமை சென்ற அண்ணாமலையிடம. ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும. தெரிவிக்கையில்;
‘கச்சதீவிற்கு தமிழக மீனவர்கள் விசா அனுமதி இன்றி சென்று வர வேண்டும். மீனவர்கள் நினைத்த நேரம் அந்த தீவில் இறங்கிச் செல்ல முடியும் என்ற 1974ஆம் ஆண்டு ஒப்பந்த்தின் 6வது சரத்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இவற்றை செய்ய வேண்டும் என்பதே பா.ஜ.கவின் விருப்பம் மாறாக தி.மு.க போன்று இரட்டை வேடம் போடுவது கிடையாது. அதாவது அதனை கொடுக்கும் போதும் தி.மு.கதான் தமிழ்நாட்டை ஆண்டது. அதவாது தற்போதைய முதல்வரின் அப்பா. இவ்வளவு கதைக்கும் மு.க.ஸ்டலின் நெருங்கிய நண்பர் டக்ளஸ் தேவானாந்தா போன்றவர்களே தமிழ்நாடு மீனவர்களிற்கு எதிராகவுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.