
கடந்த அண்மைக் காலமாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக, பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என்றும், உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்றிரவு பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில், பிரதமர் ஜோன்சன் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை பதவி விலக்க வேண்டுமாயின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது நூற்றியெண்பதிற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் மேற்கொள்ளப்பட்ட, வாக்கெடுப்பில் நூற்றி நாற்பத்தியெட்டு பேர் மாத்திரமே பிரதமர் ஜோன்சனுக்கு எதிராக வாக்களித்த அதேநேரம், இருநூற்றிப்பதினொரு பேர் பிரதமர் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில் அறுபத்தி மூன்று மேலதிக வாக்குகளினால் பிரதமர் ஜோன்சனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
பிரதமர் ஜோன்சனின் அரசியல் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட இடைவெளிகள் மற்றும் கொரோனா கட்டுப்படுத்தல்களில் சரியானவிதிமுறைகளை மேற்கொள்ளாமை போன்ற காரணங்களுக்காக, அவரது சொந்த கட்சியான கன்சவேர்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சிலரே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




