சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்த அனுமதிக்கும் பெற்றோரை தண்டிக்க புதிய சட்டம் – ஜீவன்

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை எவரும் அடிமைப்படுத்த முடியாது என்பதற்காக தொழிலாளர் கட்டளைச் சட்டத்தை வலுப்படுத்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தொழிலாளர் கட்டளைச் சட்டமே தற்போதும் காணப்படும் நிலையில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்த அனுமதிக்கும் பெற்றோரை தண்டிக்க புதிய சட்டங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களில் பொருளாதார பிரச்சினைகள் இருந்தாலும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது அதற்கான தீர்வு அல்ல என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

இதேவேளை ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பான பொலிஸ் விசாரணையில் தான் திருப்தி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் குறித்த சிறுமியின் உயிரிழப்பை சிலர் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் ஜீவன் தொண்டமான் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *