
கொழும்பு, ஜுன் 07
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 11 மற்றும் 18 ஆம் திகதிகளில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இளங்கலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டுக்கான இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் வெலிக்கடை சிறைச்சாலை கற்கை நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான இளங்கலைப் பட்டப்படிப்பினை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.