
கொழும்பு, ஜுன் 07
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்கு காரணமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்களை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, என்.பி. முர்து பெர்னாண்டோ, தெஹிதெனிய, ஷிரான் குணரத்ன, ஏ.எச்.எம்.டி நவாஸ் துரைராஜா ஆகியோர் அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
நேற்றைய தினம் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேராவின் கோரிக்கைக்கு அமைய இந்த மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.