நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.