
சில தொழிற்சங்கத் தலைவர்களால் தவறான தகவல்கள் பகிரங்கப்படுத்துவதன் மூலம் அரசியல் நலன்களின் அடிப்படையில் செயற்படுவதாக அரச மருத்துவச்சிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மருத்துவச்சி சேவைக்கு உரிய மரியாதையை அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டதாக சங்கத்தின் தலைவரான தேவிகா கொடிதுவக்கு தெரிவித்தார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறைந்த குழந்தை இறப்பு விகிதம் மற்றும் அதிக தடுப்பூசி சதவீதம் காரணமாக நாட்டின் சுகாதார சேவை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அடி மட்டத்தில் பணிபுரியும் மருத்துவச்சிகள் போன்ற சுகாதாரப் பணியாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகளினால் மாத்திரமே இவ்வாறான வெற்றிகளை அடைய முடியும்.
எவ்வாறாயினும், சில தொழிற்சங்கத் தலைவர்கள் சுயநலத்துடன் அத்தகைய ஊழியர்களின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை நாசப்படுத்துகின்றனர்.
ஒரு தொழிற்சங்கத்தை வழிநடத்தும் பௌத்த பிக்கு ஒருவர் மருத்துவச்சிகளின் நல்வாழ்வுக்கு எதிராகச் செயற்படுவதாகவும், அத்தகைய நபர்கள் எதிர்காலத்தில் சுகாதார சேவைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவார்கள்.
எனவே சுகாதார சேவையை காப்பாற்ற இதுபோன்ற செயற்பாடுகள் தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.




