சிங்கள, பௌத்த கவசத்தை தனது நலனிற்காக பயன்படுத்திய அரசு! – பௌத்த மதகுரு குற்றச்சாட்டு

நீதி இல்லாத நாட்டில் பயங்கரவாதம் உருவாகின்றது என பௌத்த கற்கைநெறிகளிற்கான வல்பொல ராகுல நிறுவகத்தின் தலைவர் கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் காடையர்கள் போன்ற பௌத்தமதகுருமார்களை வளர்த்தது ஊக்குவித்தது பல்வேறு இடங்களில் அவர்களை பயன்படுத்தியது என கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நீதி இல்லாத நாட்டில் பயங்கரவாதம் உருவாகின்றது பொறுப்புக்கூறல் என்பது அரசமைப்பிலோ அல்லது நீதித்துறையிலோ உள்வாங்கப்படவில்லை சேர்க்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் என்பது செயலமர்வுகளை நடத்துவது அறிக்கைகளை வெளியிடுவது டொலர்களை பெற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் காயங்களை ஆற்றாவிட்டால் குடும்ப வன்முறை துன்புறுத்தல்கள் சிறுவர் துஸ்பிரயோகம் என்பன அதிகரிக்கும், தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களும் சிங்கள பௌத்த கொள்கையை பயன்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இம்முறை அது ஆபத்தான விதத்தில் பயன்படுத்தப்பட்டது, முஸ்லீம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

இவர்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரித்தனர். சிங்கள பௌத்தவர்களை தனியான குழுவாகவும் ஏயை சமூகத்தினரை எதிரிகளாககவும் காண்பித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த கவசத்தை தனது நலனிற்காக அதிகளவிற்கு பயன்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *